ரே கூறும் முதலீட்டு மந்திரங்கள்..
பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனராக ரே டாலியோ என்பவர் திகழ்கிறார்.இவர் சுயமாக பெரிய முதலீட்டாளராக வலம் வந்திருக்கிறார். முதலீடுகள் என்பது இவருக்கு விவரம் தெரிந்த நாள் முதல் செய்து வருகிறார். முதலீடுகளை எப்படி செய்யலாம் என்று இவர் தரும் டிப்ஸ்களை பார்க்கலாம்.. படிப்புக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்று அவர் நம்புகிறார். வீடு வீடாக சென்று பேப்பர் எல்லாம் போட்டுள்ளார் ரே டாலியோ, Northeast Airlines விமான நிறுவனத்தின் பங்குகளை அவர் அப்போதே 300 டாலர்களுக்கு 12 வயதிலேயே வாங்கியிருக்கிறார்.சுதந்திரமாக செயல்படவும் அவர் அறிவுறுத்துகிறார். மேலும் உங்களுக்கு தெரிந்த துறை பங்குகளில் மட்டும் முதலீடுகள் செய்ய வேண்டும் என்பதும் ரேவின் கருத்து. சந்தைய அபாயங்களை பார்த்து முதலீடு செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறைவான ரிஸ்குகள் இருக்கும் பங்குகளில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்றும், பலதரப்பட்ட பங்குகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் ரே கோரிக்கை விடுத்திருக்கிறார்.