பைஜூஸின் அமெரிக்க பங்குகள் விற்க திட்டம்…
பைஜுஸ் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும்,வணிகம் செய்து வருகிறது. அமெரிக்க பங்குகளான எபிக் என்ற பெயரில் பைஜூஸ் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. ஜாஃப்ரி கேபிடல் என்ற நிறுவனத்திடம் எபிக் நிறுவன பங்குகளை விற்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடும் நிதி சிக்கலில் தவித்து வரும் பைஜூசுக்கு இந்த நிதி மிகமுக்கிய தேவையாக இருக்கிறது. 400மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இந்த டீல் முடிந்தால் பைஜூசின் கடன் பாதி குறைந்துவிடும்.Duolingo என்ற நிறுவனமும் எபிக்கை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. சொத்துகளை விற்று 1.2 பில்லியன் டாலர் கடனை அடைக்கப்போவதாக பைஜூஸ் தெரிவித்துள்ளது. Moelis & Co என்ற நிறுவனம் எபிக்கை விற்கும் பணிக்காக தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது. 2021-ல் எபிக் நிறுவனத்தை பைஜூஸ் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. கொரோனாவுக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் குறைந்ததால் மிகப்பெரிய இழப்பை பைஜூஸ் சந்தித்து இருக்கிறது.ஜாஃப்ரி கேபிடல் நிறுவனத்துக்கும் சீனாவுக்கும் தொடர்பு உள்ளதால் இந்த டீல் முடியுமா என்ற சந்தேகமும் ஒருபக்கம் எழுந்துள்ளது. பல்வேறு டெக் நிறுவனங்களுக்கும் நிதி அளித்து ஜாப்ரீஸ் நிறுவனம் பிரபலமடைந்ததாகும்.