பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..
நவம்பர் 9ஆம் தேதி இந்திய சந்தைகள், லேசான சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 143 புள்ளிகள் சரிந்து, 64,832 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் சரிந்து,19,395புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. M&M, Apollo Hospitals, Coal India, Hero MotoCorp, Power Grid Corporationநிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Adani Enterprises, HUL, Tata Consumer Products, Adani Ports,ONGC ஆகிய நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. ரியல் எஸ்டேட் துறை, ஆட்டோமொபைல் துறை பங்குகள் 1 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் அரை விழுக்காடு குறைந்தது. BASF, Power Finance, Sobha, Welspun Corp, Prestige Estate, PCBL, Global Health, JB Chemicals, Oberoi Realty Solar Industries உள்ளிட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 45ரூபாய் குறைந்த தங்கம் 5,615 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 44,920ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 76 ரூபாய் 20 காசுகளாக விற்கப்படுகிறது.கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 76ஆயிரத்து 200 ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் செய்கூலி,சேதாரம் மற்றும் நிலையான ஜிஎஸ்டி 3%சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.