இந்தியாவில் இருக்கவே விரும்புகிறோம்-பிரபலம்..யார் அவர்?
ஒரு காலத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்த வால்ட் டிஸ்னி நிறுவனம் ,தற்போது இந்தியாவில் தனது மீடியா வணிகத்தை விற்க பணிகளை செய்து வருகிறது.அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாப் இகர் தனது வணிகம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாகவும், அதே நேரம் வாய்ப்புகளையும் தேடுவதாகவும் அகர் தெரிவித்துள்ளார். எந்த இடத்தில் எங்கள் வணிக கரத்தை வலுப்படுத்த முடியும் என்பதை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.செப்டம்பர் 2022-ல் 6கோடியே 13 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் தற்போது அது 3 கோடியே 76 லட்சம் பேராக குறைந்திருக்கிறது.
அண்மையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா வாங்கிய நிலையில்,டிஸ்னியின் வருவாய் கணிசமாக குறைந்திருக்கிறது. சிக்கன நடவடிக்கையாக 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணிகளை செய்திருப்பதாகவும்,இது ஏற்கனவே வைக்கப்பட்ட அளவான 2 பில்லியன் டாலர்களைவிட அதிகம் என்றும் இகர் தெரிவித்துள்ளார். நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த, கூட்டான வணிக அனுகுமுறையை கையாள்வதாகவும் இகர் தெரிவித்துள்ளார்.