மார்கன் ஸ்டான்லியுடன் டீல் பேசும் டாடா டெக்னாலஜிஸ்..
இந்தியாவின் மிகமுக்கிய நிறுவனங்களில் ஒன்றாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின் மார்கன் ஸ்டான்லி,பிளாக்ராக் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை அந்நிறுவனம் திரட்ட இருக்கிறது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆட்டோ மொபைல் துறை,மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் அதிக முதலீடுகளை பெற்று வருகிறது. டாடா குழுமத்தில் ஒரு நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளில் செய்யும் முதல் ஐபிஓ எனப்படும் பங்கு வெளியீடு இதுவாகும். 350 முதல் 375மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இந்த ஐபிஓ திகழ்கிறது. மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமின்றி,hisallo Capital, Oaktree Capital,Key Square Capital ஆகிய நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.பெயரளவுக்கு ஆரம்ப பங்கு வெளியீடாக தெரிந்தாலும் உண்மையில் உலகின் பல பெரிய நிறுவனங்கள் ஐபிஓவுக்கு முன்பே இந்த முதலீட்டில் பங்கேற்க இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த ஆரம்ப பங்கு வெளியீடு என்பது நவம்பர் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது.இந்தாண்டின் மிகப்பெரிய ஐபிஓகளில் ஒன்றாக டாடா டெக்னாலஜீஸ் நிறுவன ஐபிஓ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் 31 தேதி வரை டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் லாபம் என்பது 23% உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் வருவாய் என்பது 15%ஆக உயர்ந்திருக்கிறது.