பத்திரம் விற்று நிதி திரட்டும் ரிலையன்ஸ்…
ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,20,000கோடி ரூபாயை நிதியாக திரட்ட முடிவெடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கான பத்திரத்திற்கு 7.79%கூப்பன் விலையில் இந்த பத்திரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் கார்பரேட் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய பத்திர திட்டமாக கருதப்படுகிறது.இந்த கடன் பத்திரங்களை விற்க 101 பேர் போட்டியில் உள்ளனர். இதில் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மட்டும் 10,000 கோடி ரூபாய் அளவுக்கான பத்திரங்களில் முதலீடு செய்ய இருக்கிறது. இதன் முதல் பே இன் வெள்ளிக்கிழமையும், இரண்டாவது பே இன் டிசம்பர் 15 ஆம் தேதியும் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடனாக வாங்கினுக்கு ஈடுகட்டும் வகையில் இந்த தொகையை ரிலையன்ஸ் களமிறக்க இருக்கிறது. மூலதன செலவினங்களுக்கும் இந்த தொகை பயன்படுத்த இருக்கிறது.செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி,ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர கடன் மட்டும் 2.95 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.இந்தாண்டு விற்கப்படும் கடன் பத்திரங்கள் நவம்பர் 10,2033ஆம் ஆண்டு முதிர்ச்சி அடைய இருக்கிறது. கடைசியாக ரிலையன்ஸ் தனது கடன் பத்திரங்களை 2020ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தனர்.அந்தாண்டு கடன் பத்திரங்கள் மூலமாக 2,795 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த பத்திரங்கள் 5 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைய இருக்கிறது.இந்த பத்திரங்களின் கூப்பன் விகிதம் 7.40%ஆக இருக்கிறது.