மறந்துடாதீங்க நவம்பர் 25.. விவரம் உள்ளே…
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது 17,000கோடி ரூபாய் பங்கு பை பேக் திட்டத்துக்கு நவம்பர் 25ஆம்தேதி ரெக்கார்ட் தினமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தை பெரிதாக்குவதற்காக பங்குகளை வைத்து முதலீடுகள் ஈர்க்கப்படுவது வழக்கம் பின்னர் எதிர்பார்த்த வளர்ச்சியை நிறுவனம் எட்டியதும் வெளியிட்ட பங்குகளை நிறுவனமே திரும்பப்பெறுவது பைபேக் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் 17,000கோடி ரூபாய் மதிப்புள்ள பைபேக் திட்டம் குறித்த அறிவிப்பை டிசிஎஸ் கடந்த அக்டோபரில் வெளியிட்டிருந்தது.4150 ரூபாய் ஒரு பங்கின் விலை என மொத்தம் 4 கோடியே9 லட்சம் பங்குகள் திரும்ப வாங்கப்பட இருக்கின்றன.. டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்வது இது 5ஆவது முறையாகும். கடந்த ஜனவரியில் சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பைபேக் நடைபெற்றது.டிசம்பர் 2020ல் நடந்த பைபேக்கின் மதிப்பு 16ஆயிரம் கோடி ரூபாயாகும். 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளிலும் பைபேக் நடைபெற்றன. புதன்கிழமை நிலவரப்படி டிசி எஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 3ஆயிரத்து 404ரூபாயாக இருந்தது.இந்த ஓராண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவன பங்கு மதிப்பு 4விழுக்காடு வளர்ந்திருக்கிறது.தேசிய பங்குச்சந்தையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் 9%ஆக உயர்வு இருந்து வருகிறது.