ஃபிராடு கணக்குகளுக்கு மேலும் சிக்கல்…
வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு ஏமாற்றுவது ஒரு ரகம் என்றால், போலியான வங்கிக்கணக்குகள், வேறொருவர் வங்கிக்கணக்குகள் மூலம் பரிவர்த்தனை நடத்துவது இன்னொரு ரக மோசடி. இந்நிலையில் மோசடியான வகையில் இயங்கி வரும் கணக்குகள் குறித்து இனி வங்கிகள் கூட மேலிடத்துக்கு தகவல் அனுப்பும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகள் சங்கமும் , தேசிய மின் ஆளுகை சேவை நிறுவனமும் இணைந்து புதிய நுட்பத்தை வடிவமைத்து வருகின்றனர். இதன் மூலம் மோசடி வங்கிக் கணக்குகள் குறித்து ரிப்போர்ட் செய்வது மிகவும் எளிதாகிவிடும்.
10 முதல் 100கோடி ரூபாய் வரை மோசடி செய்வோர் குறித்த தகவல்கள் இந்த இரு தளங்களிலும் பரமாறிக்கொள்ளப்படும்.
புதிய விதிப்படி அனைத்து வகையான வங்கிகளும் NEsl அமைப்புக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மோசடி நடந்ததாக கூறப்படும் தரவுகள் சிறியதோ,பெரியதோ முதலில் இனி NESLக்கு தகவல் பறந்துவிடும்.
வெளிப்படைத்தன்மை,விரைவான தீர்வு காண உகந்த வகையில் இந்த புதிய ரிப்போர்ட்டிங் முறை உருவாக இருக்கிறது.
மோசடி குறித்த ஆவணங்களை பகிர்ந்துகொள்ளும்போதுதான் அது திவாலாகும்போது முக்கிய ஆவணங்களாக வைத்துக்கொள்ள முடியும் என்கிறது வங்கி வட்டாரங்கள்.