பங்குச்சந்தையில் சரிவு..
இந்திய பங்குச்சந்தைகளில் நவம்பர் 20ஆம் தேதி சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிந்து 65,655 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் சரிந்து 19,694புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Adani Enterprises, M&M, Bajaj Finance, SBI Life Insurance and UltraTech Cement நிறுவன பங்குகள் நிஃப்டியில் லாபத்தை பதிவு செய்தன. Adani Enterprises, M&M, Bajaj Finance, SBI Life Insurance and UltraTech Cement பங்குகள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.6%உயர்ந்தன. ஆட்டோமொபைல்,உலோகம், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிந்தன. Tata Investment Corporation, KPIT Technologies, Metro Brands, PB Fintech, GlaxoSmithKline Pharmaceuticals, Power Finance, New India Assurance, Bikaji Foods, General Insuran, REC உள்ளிட்ட 400 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 45640 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5 ரூபாய் விலை உயர்ந்து 5705ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 79ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.