வங்கிகளுக்கு புதிய அபராதம் விதிப்பு?

மக்களுக்கு நிதி சேவை அளிக்கும் வங்கிகள் விதிமீறினால் கூடுதல் அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. வங்கிகளின் சிஇஓவுகளுக்கு சம்பளம் குறித்தும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. வங்கிகளுக்கு கூடுதல் மூலதனங்களை சேர்ப்பது குறித்தும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. அரசுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது குறித்தும் சக்தி காந்ததாஸ் ஆலோசனை நடத்தினார். அண்மையில் விதிகளை பின்பற்றாத ஆக்சிஸ் வங்கிக்கு 90.92 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மணப்புரம் நிதி நிறுவனத்துக்கும் 42லட்சம் ரூபாய்அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மும்பையைச் சேர்ந்த ஆனந்த் ரதி நிதி நிறுவனத்துக்கும் அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி சேவைகளை முறையாக வழங்காத நிறுவனங்களுக்கு தற்போது இருப்பதைவிட அதிக அபராதம் வதிப்பது குறித்தும் ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
விதிகளை மீறியதாகவும், முறையான விதிகளை பின்பற்றாத புகார்களிலும் ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.