ஃபர்ஸ்ட் ஜெர்மனி அப்புறம்தான் இந்தியா..
உலகம் முழுவதும் ஒரே ஒரு கார் மாடல் பயங்கர பிரபலமாக இருக்கிறது. அந்த காரின் பெயர் டெஸ்லா, எலான் மஸ்க்கின் சொந்த நிறுவனமான இந்நிறுவனம் முதலில் அமெரிக்காவிலும் பின்னர் சீனாவிலும் பிரபலமடைந்தது. இந்த நிலையில் 25,000யூரோக்கள் தொகை கொண்ட 2 டோர்கள் கொண்ட சொகுசு கார் முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதே மன்சார கார் அதன் பிறகுதான் இந்தியாவுக்கு வர இருக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் அதற்கான உதிரி பாகங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த மாடலின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தியாவில் மாடல் Y கிராஸ் ஓவர் ரக கார்கள்தான் முதலில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் மாடல் 3செடான் ரக கார்கள் போலவே புதிய மாடல்கார்களும் தோற்றமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டெஸ்லா ஆலையிலேயே நேரில் சென்று கார் உற்பத்தியை ஆராய்ந்தார். இந்தியாவில் இருந்து டெஸ்லாவுக்கு அனுப்பப்படும் பொருட்களை இரட்டிப்பாக்கவும் முடிவு செய்தார். டெஸ்லா நிறுவனத்துக்கான மூலப்பொருட்கள் 1.7பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவில் இருந்து வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கார் சந்தைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்த புதிய மாடல் கார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது