ஒன்றரை லட்சம் கோடி கடன் தரும் வங்கி..
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தினேஷ் காரா திகழ்கிறார். இவர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாரத ஸ்டேட் வங்கி ஒன்றரை லட்சம் கோடி கார்பரேட் கடன்தர தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
மொத்த கார்பரேட் கடன் என்பது ஆண்டுதோறும் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படும் நிலையில் இந்தாண்டு இன்னும் 1.5 லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் இதன் முதல் கட்டமாக புதிய கடன்கள் அளிக்கப்பட இருக்கின்றன. வழக்கமாக பெரிய மற்றும் நடுத்தர கார்பரேட் கடன்கள் மட்டும் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்கப்படும்,ஆனால் அதில் 3-ல் ஒரு பங்கு இனி விநியோகிக்கப்படும் என்றும் காரா தெரிவித்தார்.
அண்மையில் நடந்த வர்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் காரா பங்கேற்றார். முன்னதாக பேசிய அவர், கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தருவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார். இன்னும் கூட அதிக கடன் தர பாரத ஸ்டேட் வங்கி தயாராக இருப்பதாகவும் இவர்களுக்கு அளிக்கப்படும் தொகையைப் போல வட்டியும் பெரிய அளவில் இருப்பதால் இது வங்கிகளுக்கு எப்போதுமே லாபகரம்தான். 24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு விவரங்களும் அண்மையில் வெளியிடப்பட்டன.