மனைவிய பிரிந்ததால் 180 மில்லியன் டாலர் இழப்பு…
உலகின் பெரிய சூட் தயாரிப்பு நிறுவனமாக ரேமன்ட்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தை நிர்வகித்து வரும் கவுதம் சிங்கானியாவுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இது வியாபாரத்திலும் பிரதிபலிக்கிறது. கடந்த 7 நாட்களாக ரேமன்ட்ஸ் நிறுவன பங்குகள் விலை சரிந்து வருகின்றன. நவம்பர் 13 முதல் அந்நிறுவன பங்குகள் 12% வரை சரிந்தன. ரேமன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்த கவுதமின் மனைவி நவாஸ் சிங்கானியா பிரிவதால் அந்நிறுவனத்தின் சந்தை மூலதன பங்குகள் 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்தன. புதன்கிழமை மட்டும் இந்நிறுவன பங்குகள் 4.4% சரிந்தது. கவுதமை பிரிவதால் ஜீவனாம்சமாக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை நவாஸ் கோரியிருந்தார். இருவரும் பிரிவதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்று கணிக்க முடியாதததாக இருக்கிறது. குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை தற்போது ரேமண்ட் குழும நிறுவனங்களையும் வெகுவாக பாதிக்கும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக அச்சம் இருக்கிறது.