பெருந்தலைகளுக்கு என்ன ஆச்சி
கொரோனா காலகட்டத்துக்கு பிறகு இந்தியா முழுவதும் சுமார் 110 பெரிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் பதவியில் இருந்து விலகியிருக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். இந்த வெளியேற்றம் என்பது முதல் 10 மாதங்களில் மட்டும் நடந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதே அளவு தொடர்கிறதாம். 2014 ஆம் ஆண்டில் பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகள் விலகியதோ,வெளியேறியதோ வெறும் 65 ஆக இருந்திருக்கிறது. தற்போது உலகளவில் இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டேதான் செல்கிறதாம். 2020 காலகட்டத்தில் இந்தியாவில் முதல் 10 மாதங்களில் மட்டும் 96 சிஇஓகள் மட்டுமே வெளியேறியிருக்கின்றனர். இதற்கு அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 93 ஆக இருந்திருக்கிறது. இந்தாண்டின் 10 மாதங்களில் பதவி விலகிய பெரிய தலைகளின் முக்கியமான காரணம் ராஜினாமாவாக இருக்கிறது. தலைமை பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதுதான் சிக்கலாக இருப்பதாக மேரிகோ நிறுவனம் தெரிவிக்கிறது. சிஇஓவின் பணிகள் என்பது தற்போதைய காலகட்டத்தில் வளர்ந்துகொண்டே செல்வதாகவும், எத்தனை அதிக பணி சுமையோ அத்தனை அதிகம் சம்பளமும் அளிக்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். பெரிய தலைமை பதவிகளில் இருக்கும் நபர்களுக்கு அதிக பணிவாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தலைமை பண்புக்கு தேவை அதிகம் இருப்பது உண்மைதான் என்றபோதிலும் திறமைகள் உள்ளோர் வெகு சிலராகவே இருக்கின்றனர் என்கிறார்கள் நிபுணர்கள். வாடிக்கையாளர்கள் அதிகம் முதலீடு செய்யும் துறைகளின் தலைமை செயல் அதிகாரிகள்தான் அதிகம் பதவிவிலகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் நிதி சேவை வங்கும் நிறுவனங்களின் சிஇஓகள் 20 பேர் கடந்தத 10 மாதங்களில் வெளியேறியிருக்கின்றனர். தொழில்துறையைச் சேர்ந்த 19 சிஇஓகள் வெளியே சென்றிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.