நிதி நிறுவன பிரிவை தொடங்க தயாராகும் எல்ஐசி..
இந்தியாவில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் காலத்துக்கு தகுந்தபடி எல்ஐசி நிறுவனமும் தன்னை அப்கிரேடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிதிநுட்ப பிரிவை ஆரம்பிக்க எல்ஐசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திட்டத்துக்கு DIVEஎன்று பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கு என தனியாக ஆலோசகரும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் முன்னெடுப்பை வாடிக்கையாளர்கள், மார்கெடிங் செய்வோருக்கும் அளிக்கும் வகையில் DIVEதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாம். புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் பணிகளும் இதிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். க்ளையம் செட்டில் செய்வது, லோன் எடுப்பது உள்ளிட்டவை ஒரு கிளிக்கில் செய்வது குறித்தும் எல்ஐசி ஆலோசித்து வருகிறது. இந்த புதிய திட்டம் செயலுக்கு வந்தால், எல்ஐசி அலுவலக்துக்கு கூட வாடிக்கையாளர்கள் செல்லத் தேவையிருக்காதாம். வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் வாடிக்கையாளர்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்தாண்டில் மட்டும் 3 நிதிநுட்ப நிறுவனங்களை முகவர்களாகவும் எல்ஐசி இணைத்துக் கொண்டுள்ளது.
வரும் டிசம்பரின் முதல் வாரத்தில் ஒரு புதிய திட்டத்தையும்,அந்த புதிய திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் 10 விழுக்காடு கூடுதல் லம்ப்சம் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். புதிய பாலிசியில் லோன் எடுக்கும் வசதியும், பணத்தை திரும்ப எடுக்கும் வசதியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.