அது தொடங்கப் போகுது எப்போ தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான டிசிஎஸ் தனது 17,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் திரும்பப் பெறுகிறது. டிசம்பர் 7 ஆம் தேதி வரை இந்த பை பேக் திட்டம் நடைமுறைக்க வர இருக்கிறது.
மொத்தம் 4.09 கோடி ஈக்விக்கி பங்குகளை ஃபேஸ் மதிப்பு 1 ரூபாய் என்ற அளவில் திரும்ப வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கணக்கிட்டு இந்த பங்குகளுக்கு பைபேக் நடைபெற இருக்கிறது.
ஒரு பங்கின் விலை 4150 ரூபாய்க்கு திரும்ப வாங்கிக்கொள்வதாக டிசிஎஸ் தெரிவித்திருக்கிறது. இந்த பைபேக்கால் நிறுவனத்துக்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாது என்று டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.
டாடா சன்ஸ் குழுமம்,2 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 690 பங்குகளை டெண்டர் தந்து டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்பரேஷன் நிறுவனமும் 11ஆயிரத்து 358 பங்குகளை விட்டுக் கொடுக்கவும் தயாராகி வருகிறது.
பைபேக் பணிகள் நடந்து முடிந்த பிறகு புரோமோட்டர் பங்கு 72.3%ஆகவும், புரோமோட்டர் குரூப் ஷேர் ஹோல்டிங் பங்கு 72.41 % ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு 16,000கோடி ரூபாய் அளவுக்கு முதல் முறையாக பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் டிசிஎஸ் ஈடுபட்டது.
அதன்பிறகு 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளிலும் பைபேக் நடைபெற்றது. இதேபோல் 2022ஆம் ஆண்டும் ஒரு பைபேக் நடைபெற்றது. டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக வெளியான தகவலால் தேசிய பங்குச்சந்தையில் இந்த நிறுவன பங்குகள் 47 விழுக்காடு வரை உயர்ந்தன.