ஆயிரம் ரூபாயை முதல்முறை கடந்த பார்தி ஏர்டெல் பங்கு…
பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி தொலைதொர்பு நிறுவனமாக திகழ்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு வரலாற்றிலேயே முதல் முறையாக 1ஆயிரம் ரூபாயை கடந்திருக்கிறது. 2.4%உயர்ந்த இந்நிறுவன பங்குகள் ஆயிரத்து 7 ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு 23.56% விலை உயர்ந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏர்டெல் நிறுவன பங்குகள் அசுர வேகத்தில் வளர்வதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தனது ரிட்டர்ன்ஸை 59%அதிகரித்திருந்தது. ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் 9 நிறுவனங்கள் பெரிய சந்தை மதிப்பை வைத்திருக்கின்றன. செப்டம்பருடன் முடிந்த 2ஆம் காலாண்டில் ஏர்டெல் நிகர லாபமாக 1341 கோடி ரூபாய் இருக்கிறது