எண்ணெய் ஏற்றுமதி கொள்கையில் இன்று மாற்றம்?
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஆங்கிலத்தில் ஓபெக் நாடுகள் என்று பெயராகும். இதில் சில நாடுகள் கூடுதலாக இணைந்திருக்கின்றன. இந்த நாடுகளுக்கு ஓபெக் பிளஸ் நாடுகள் என்று பெயர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஓபெக் நாடுகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.
கடந்த 26 ஆம் தேதியே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று நவம்பர் 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ஆப்ரிக்க நாடுகளில் உற்பத்தியை குறைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் ஒரு நாளைக்கு 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு முதல் உலகளவில் 5 விழுக்காடு தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சவுதி அரேபியா கூடுதலாக 10லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் வரும் டிசம்பர் இறுதி வரை ஒருநாளைக்கு 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் குறைய இருக்கிறது. தற்போது இருப்பதைவிட கூடுதலாக 13 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை திடீரென குறைந்திருந்த நிலையில், 75 முதல் 95 டாலர் வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விற்க போதுமான ஏற்பாடுகளை ஓபெக் நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
2024 ஆம் ஆண்டிலும் இதே நிலை தொடரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது .உலகளவில் 2024 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் ஒரு நாளைக்கு 19லட்சம் பேரலில் இருந்து 15 லட்சம் பேரலாக குறைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.2024 முதல் காலாண்டில் உற்பத்தியை விட விநியோகம் குறையவே வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. ஓபெக் நாடுகள் என்ன முடிவெடுப்பார்களோ, பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.