பங்குச்சந்தைகளில் ஏற்றம்
நவம்பர் 29 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம் காணப்பட்டது. சுமார் 1 விழுக்காடு அளவுக்கு இந்திய சந்தைகள் உயர்ந்தன. முக்கிய காரணிகளாக 7 காரணிகள் உள்ளன.அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதுதான் உலகளாவிய சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் வாங்க ஆர்வம் காட்டியது இரண்டாவது முக்கிய காரணியாகும் இதேபோல் அதிக லாபத்தை நிச்சயம் ஈட்டித்தரும் திறமை கொண்ட புளூசிப் ஃபண்ட்களின் முயற்சியால் இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டன. சர்வதேச அளவில் பலநாட்டு பங்குச்சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. பிரதான காரணங்களில் ஒன்றான கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் இந்திய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான வருவாய் குறைந்திருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான வெளிநாட்டு பணத்தின் மதிப்பு என்பது 103க்கும் அதிகமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் சந்தைகளில் பாதகம் ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில் குறிப்பிட்ட இந்த குறியீடு 102புள்ளிகளாக சரிந்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். இந்த 7 காரணிகளைத்தான் நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.. புதன்கிழமை வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்ச்தைகளில் குறிப்பாக மும்பை பங்குச்சந்தையில், பெரிய மாற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் 727 புள்ளிகள் உயர்ந்து 66901 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சநதை குறியீட்டு எண் நிஃப்டி 206 புள்ளிகள் உய்ர்ந்து 20096 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக்கொண்டனர். இந்திய பங்குச்சந்தைகளில் இரண்டாவது ஆட்டமும் பலமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.