785 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதிக்க யார் காரணம்?
முதலீட்டில் உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருப்பவர் வாரன் பஃபெட். இவரின் நிறுவனத்தின் பெயர் பெர்க்ஷைர் ஹாத்வே என்பதாகும். வாரன் பஃபெட்டின் வலதுகை என்று சார்லி மங்கர் என்பவர் போற்றப்படுகிறார். சார்லி மங்கர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதுவதும் தனது 99 ஆவது வயதில் காலமானார். அவரின் முயற்சியால்தான் பெர்க்ஷைர் நிறுவனம் மிகப்பெரிய முதலீடுகளை செய்து வியக்க வைத்திருக்கிறது. மிகச்சிறந்த நிறுவனங்கள் அதே நேரம் குறைத்து மதிப்பிடப்பட்ட நிறுவனங்களை அடையாளம் காண்பதில் சார்லி வல்லவராக இருந்தார்.
பெர்க்ஷர் ஹாத்வே தற்போதைய நிலையில் இருப்பதற்கு சார்லியின் இன்ஸ்பிரேஷன் தான் காரணம் என்றும் அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 1960 மற்றும் 70களில் மங்கர் வைத்திருந்த நிறுவனங்கள் தொடர் வெற்றிகளை அள்ளித்தந்தன. அவர் பங்களிப்பு செய்த நிறைய ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளும் பெரிய லாபத்தை அந்த காலகட்டத்தில் வாரி வழங்கின. தாம் நடத்தி வந்த நிறுவனத்தை மூடிய மங்கர், தனது திறமைகளை மெருகூட்டும் வகையில் பெர்க்ஷைர் நிறுவனத்தில் கடந்த 1975களில் மங்கர் துணைத்தலைவர் பதவியை பெற்றிருந்தார். சின்னஞ்சிறு பங்குகளை வாங்கும் போக்கை மாற்றியது மங்கர்தான் என்றும் பஃபெட் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆமாம்,இல்லை,மிகக்கடினம் என்று 3 பிரிவுகளில் தான் பங்குகளை அனுகவேண்டும் என்று மங்கர் குறிப்படுவார் என்று பஃபெட் கூறியிருக்கிறார். பிட் காயின்களை எலியை கொல்லும் விஷம் என்று மங்கர் கூறியதை பஃபெட் பிரதிபலித்திருக்கிறார்.