ஐயோ..மீண்டும் மீண்டுமா?
உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச வெங்காயத்தை இந்தியா தான் உற்பத்தி செய்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயம் வங்கதேசம்,மலேசியா,ஐக்கிய அரபு அமீரக நாடுகள், இலங்கை, நேபாளம்,இந்தோனிசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டில் வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் ஒரு கிலோ சில்லறை வெங்காயத்தின் விலை 29ரூபாய் 76 பைசாவாக இருந்தது. இந்த விலை கடந்த 29ஆம் தேதி 57 ரூபாய் 85 பைசாவாக இருக்கிறது. இது அரசாங்கமே சொல்லயிிருக்கும் புள்ளி விவரம்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறுது. இதற்கு முக்கிய காரணம் அதீத கனமழையாம். புனே,நாசிக்,அகமது நகர்,அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களில் மழையால் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறதாம். ஆண்டுக்கு 3 முறை விளைவிக்கப்படும் வெங்காயம், அதீதமாக உயர்வதும்,அதள பாதாளத்தில் சென்று வீழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்திய விலைவாசி ஏற்றத்தின் பங்களிப்பில் வெங்காயத்தின் பங்கு மட்டும் 0.64% ஆக இருக்கிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்தால் விலைவாசி உயர்வும் கணிசமாக இருக்கும். வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தால் இல்லதரசிகள் அவதிப்படுவது நிச்சயமாக இருக்கிறது.