பங்குச்சந்தைகளில் ஏற்றம்
நவம்பர் 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. .மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்து 66988 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 20133 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. உலகளாவிய பங்குச்சந்தைகள் பெரியளவில் சரிவை கண்டுள்ள போதும்,இந்திய சந்தைகள் லேசான உயர்வை கண்டுள்ளன. கடைசி நேர வர்த்தகம் நஷ்டத்தை சரி செய்தது.
UltraTech Cement, HDFC Life, Sun Pharma, Apollo Hospitals, Eicher Motors ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.
IndusInd Bank, Adani Enterprises, Adani Ports, Reliance Industries, Power Grid Corporation ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. பொதுத்துறை பங்குகள் சுமார் ஒன்றரை மடங்கு விலை குறைந்து முடிந்தன.
New India Assurance, NBCC (India), Indiabulls Housing Finance, Varun Beverages, Prestige Estate, Max Healthcare, KSB Pumps, Brigade Enterprises, GAIL,Muthoot Finance ஆகிய நிறுவனங்கள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை முன்தின விலையை விட 40 ரூபாய் விலை குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 46920ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5865 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 82ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டி வெள்ளி விலை 82 ஆயிரத்து 200ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும், ஜிஎஸ்டியும் கட்டாயம் சேர்க்கப்படவேண்டும். ஆனால் செய்கூலி, சேதாரம் ஒவ்வொரு கடைக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தங்கம் வாங்குவது போலவே தங்கப்பத்திரத்தையும் மக்கள் கருத்தில் கொள்ளலாம்.