பாராசூட் உற்பத்தி நிறுவனத்தை வாங்கிய மஸ்க்..
ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் முதலாளியாக உள்ள எலான் மஸ்க் எந்த போட்டியாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிட முடிவெடுப்பவர். இவர் அண்மையில் Pioneer Aerospaceஎன்ற நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். வெறும் 2.2மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்யிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்க இந்த வகை பாராசூட்கள் உதவுகின்றன. Pioneer Aerospace நிறுவனம் திவாலான நிலையில் கிடைத்த விலைக்கு வாங்கிப்போட்டுவிட்டார் மஸ்க், குறிப்பிட்ட இந்த நிறுவனம்தான், விண்வெளி ஆய்வு வீரர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி வைக்கவும், இந்த நிறுவன பாராசூட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு பாராசூட்களை மஸ்க் தற்போது வாங்கியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வகை டிரோக் வகை பாராசூட்கள் 18 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மணிக்கு 350 மைல்கள் வேகத்தில் இந்த பாராசூட்களை தரையிறக்க முடியும். ஏற்கனவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட் உதிரி பாகங்களை தயாரித்து சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய மஸ்க், இப்போது பாராசூட் நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை.