அசத்திய டாடா டெக் …
டாடா மோட்டார்ஸின் ஒரு பகுதியான டாடா டெக் நிறுவனம் அண்மையில், ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்தது. இந்த பங்குகள் ஒரு பங்கு 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் மதிப்பு 1200ரூபாயாக அகிகரித்திருக்கிறது.
இது 140 விழுக்காடு அதிகரித்திருக்கிறதாம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதால் 73லட்சத்து 38 ஆயிரம் பேர் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட69.43 மடங்கு அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது.
நிறுவனங்கள் சார்பில் வாங்கப்பட்ட பங்குகளின் மதிப்பு 203.41 மடங்கு அதிகரித்துள்ளது. niiஎனப்படும் நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 62.11 மடங்கு அதிக முதலீடு செயதிருப்பதாகவும், சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 16.5மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில். 6.08கோடி பங்குகள் ofs வகையில் விற்கப்படடன. டாடா மோட்டார்ஸ், ஆல்பா டிசி ஹோல்டிங்க்ஸ்,டாடா கேபிடல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த பங்குகளை அலாட் செய்கின்றன. 3ஆயிரதத்042 கோடி கேட்க ஒரு பங்கு 475 முதலீடு செய்யப்பட்டன. டாடா என்ற ஒற்றை பிராண்ட் மதிப்பே வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை உருவாக்கியது., இதனிடையே டாடா மோட்டாரஸ் மற்றும் ஜாக்குவர் லேண்ட்ரோவர் நிறுவனம் டாடா டெக்னாலஜிஸ்க்கு என்ன முதலீடு தேவையோ அதை நடுத்தரம் மற்றும் நீண்டகாலத்துக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோமோட்டிவ் துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.