ஸ்பைஸ்ஜெட்டுக்கு இறக்கை கொடுத்த முதலீட்டாளர்கள்..
கடனில் தவிக்கும் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் திங்கட்கிழமை நடக்க இருக்கிறது. ஏற்கனவே பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் தேவைப்படும் இந்த நிறுவனத்தில் முதலீடுகளை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அளிக்க இரண்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு முதலீட்டாளிடம் இருந்து மட்டுமே ஆயிரம் முதல் ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட இருக்கிறது. மற்றொரு முதலீட்டாளரிடம் இருந்து 300கோடி ரூபாய் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் திங்கட்கிழமை கூட இருக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் கூடுதலாக முதலீடுகளை பெற வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே வாரத்தில் 18%உயர்ந்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் இழப்பு கடந்த காலங்களில் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு கடந்தாண்டில் ஆயிரத்து 513 கோடி, இதற்கு முந்தய ஆண்டில் 1744கோடி ரூபாயாக நஷ்டமிருந்தது. கடந்த காலாண்டில் இந்நிறுவனம் 197 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்திருக்கிது.. புகார்கள் காரணமாக அண்மையில் ஸ்பைஸ்பெட் நிறுவன விமானங்கள் துபாயில் நிறுத்தப்பட்டன. பின்னர் கடும் விதிகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டன. முதலீட்டாளர்கள் வந்திருக்கும் நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மீண்டும் பழையபடி விமானங்களை இயக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.