25 கோடியை இறக்கும் எல்ஐசி..
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தனது பரஸ்பர நிதிப் பிரிவிற்கு 25 கோடி ரூபாயை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை எல்ஐசி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அளித்திருக்கிறது. இது தொடர்பாக எல்ஐசி தனது பங்குச்சந்தை ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான LIC Mutual Fund Asset Management Ltd இந்திய அளவில் 6 ஆவது பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனமாக இருக்கிறது.
இதன் சொத்துமதிப்பு 2009ஆம் ஆண்டு நிலவரப்பட்டி 50ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு இந்த மதிப்பு 19,000கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 11ஆம் தேதி எல்ஐசி பரஸ்பர நிதி நிறுவனத்தில் 45 விழுக்காடு பங்குகளை எல்ஐசி கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 39.30 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறது. GIC ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 11.70 விழுக்காடு பங்குகளையும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்கு 4 விழுக்காடு கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 7925 கோடி ரூபாயாக இருந்தது. இதே அளவு என்பது கடந்தாண்டு 15,952 நிகர லாபமாக இருந்தது.
எல்ஐசி நிகர பிரீமியம் வருமானம் 19 விழுக்காடு,அதாவது 1.07 லட்சம் கோடி ரூபாய் கடந்த காலாண்டில் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர், 1.32 லட்சம் கோடியாக நிகர பிரீமியம் வருமானம் இருந்தது.