வரலாறு படைத்த இந்திய சந்தைகள்…
இந்திய பங்குச்சந்தைகள் நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரலாறு படைத்து வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் பெடரல் ரிச்ர்வின் அறிவிப்பு எதிரொலியாக இந்திய சந்தைகள் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி மட்டும் 2.78 லட்சம் கோடி ரூபாய் லாபமாக கிடைத்திருக்கிறது. சந்தை மூலதனம் என்பது 357.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. டிசம்பர் 15 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 970 புள்ளிகள் உயர்ந்து 71,483 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273 புள்ளிகள் உயர்ந்து 21,457 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
1960 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன, அதே நேரம் 1800 பங்குகள் சரிவை கண்டுள்ளன. 121 புள்ளிகள் எந்த வித மாற்றத்தையும் சந்திக்கவில்லை. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டும் சுமார் 4.56 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன.
உலோகம், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன.
ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சரிவை கண்டது. ஆட்டோமொபைல் துறை, தினசரிவீட்டு உபயோக பொருட்கள் துறை பங்குகளும் பங்கம் செய்துவிட்டன. எச்சிஎல் நிறுவனம் 5.59%உயர்வை கண்டது. டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 5 விழுக்காடுக்கும் அதிகமாக உயர்வை கண்டன. SBI, Tata Steel, Tech Mahindra,NTPC ஆகிய நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை சந்தித்தன. HDfc life insuranceமிகப்பெரிய சரிவை கண்டது. Nestle India, Bharti Airtel, SBI Life Insurance, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. பங்குச்சந்தைகள் ஒருபக்கம் உச்சங்களை தொட்டு வரும் நிலையில் தங்கம் விலையும் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையைவிட 10 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5830 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவகன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வகையில் தங்கம் நமது அவசர கால நண்பனுக்கு இணையாக உதவும் என்பது மட்டும் நிச்சயம்.