குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை..
இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறை அக்டோபர் மாதத்தில் இருந்ததை விட கணிசமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தரவுகள் தெரிவித்துள்ளன. கடந்த அக்டோபரில் பொருட்களை வர்த்தகம் செய்யும் அளவு 31.46 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்த நவம்பரில் 20.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருக்கிறது.
கடந்தாண்டு இதே நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை என்பது 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
அதே நேரம் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அளவானது 2.8விழுக்காடு குறைந்து, 33.90 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்திருக்கிறது. இது கடந்தாண்டு 34.89பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்கிறது அரசாங்க புள்ளிவிவரம். இந்தியாவின் இறக்குமதி அளவு என்பது கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 54.48பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்தாண்டு 55.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் , உற்பத்தி சரிவு என்பது 6.51விழுக்காடாக உள்ளது. 278.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உற்பத்தி சரிவு இருந்தது. ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையுள்ள காலகட்டத்தில் இறக்குமதி 8.67% குறைந்து 445.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.