முதலீடுகளை குவித்த வெளிநாட்டவர்…
கடந்த 15 நாட்களாக, இந்திய பங்குச்சந்தைகளில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு மிக அதிக அளவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க கடன்பத்திரங்களின் வருவாய் சரிவு, அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் வட்டி குறைப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சியில் சாதகமான சூழல், உள்ளிட்ட அம்சங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உற்சாகமடைந்திருக்கின்றனர்.
வெளிநாட்டு நிதி முதலீடு5.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் டிசம்பரின் முதல் பாதியில் வருவாயாக கிடைத்துள்ளது. மொத்த வெளிநாட்டு முதலீடுகள் 427.33 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால்,
கடந்த ஆகஸ்ட் 2022 தரவுகளைவிடவும் அதிகமான முதலீடுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் இருந்தே, இந்திய சந்தைகளில் வெளிநாட்டினரின் ஆதிக்கம், அதிகளவில் இருந்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7விழுக்காடுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக, ஜெஃப்ரீஸ் என்ற நிறுவன நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2025ஆம் ஆண்டுக்குள் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 15விழுக்காடு வரை வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இரண்டும் தலா 6.6% விலை அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் குவியும்போது, இந்திய முதலீட்டாளர்களின் பங்குகள் முதலீடும் அதிகரிக்கும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் பணம் முதலீடு செய்யும்போது , அதன் மதிப்பு மொத்த மதிப்பை உயர்த்துகிறது.
குறிப்பாக 1.74 டிரில்லியன் ரூபாய் பணம், டிசம்பர் 15 வரை முதலீடுகளாக பெறப்பட்டுள்ளன.
2022-23 நிதியாண்டில் அதிகப்படியான முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியேறியிருந்தன.
இந்திய ரூபாயில் ஒரு அமெரிக்க டாலர் 83 ரூாபாய் 01 காசுகளுக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.