இந்தியாவை புகழ்ந்த ஐஎம்எஃப்..
தெளிவான முடிவுகளுக்கும், சீரான செயல்பாடுகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உலகளவில் மிகவும் பிரபலமானதாகும். இந்நிலையில் இந்தியாவின் நிதி சார்ந்த கொள்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடனை சீராக பராமரிக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு, ஐஎம்எஃப் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நிதிப்பற்றாக்குறையை ஜிடிபியில் இருந்து 5.9விழுக்காடாக நடப்பு நிதியாண்டில் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையை 4.5விழுக்காடாக குறைக்கவும் திட்டங்கள் உள்ளன. இதனை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணைய நிதியம், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை 3 விழுக்காடாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஐஎம்எஃப் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ஜிஎஸ்டி மற்றும் அது தொடர்பான மானியங்களின் மீது கவனம் சென்றுள்ளது. மேலும் பொதுமக்களின் முதலீடுகளும் பாதிக்கும் சூழல் குறித்தும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்பது வரும் ஆண்டும்,நடப்பாண்டும் 6.3%ஆக இருக்கும் என்று கணித்துள்ள நிதியம், இந்தியாவின் வளர்ச்சி ஜூலை-செப்டம்பரில் நிலைபெற்றதாக பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வரும் ஜனவரியில் உலக பொருளாதார முன்னோட்ட அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கிடுக்கிப்பிடி கொள்கைகளால் இந்தியாவின் வளர்ச்சி மேலும் உயரும் என்றும், பணவீக்கத்தில் நல்லதொரு தாக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரிமாதம் முதல் ஏற்பட்டு வரும் உணவுப் பொருட்கள் விலைவாசியை கருத்தில் கொண்டு இதுவரை 2.5 விழுக்காடு கடன்கள் மீதான வட்டியை ரிசர்வ்வங்கி உயர்த்தியிருக்கிறது. மத்திய அரசு இது தொடர்பான புதிய தரவுகளை வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இது நடப்பு அரசாங்கத்தின் கடைசி தரவாக இருக்கும், ஏனெனில் அதற்கு அடுத்த மாதத்தில் இடைக்கால பட்ஜெட் வந்துவிடும்.