இ பைக்குக்கு இனி மானியம் கிடையாதா?
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு FAME என்ற திட்டத்தின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மானியம் அளித்து வந்தது. இதுவரை இரண்டு கட்டங்களாக அளிக்கப்பட்டு வந்த மானியம் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதன் பிறகு 3ஆவது கட்ட நிதியை ஒதுக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நிதியமைச்சகம் மற்றும் அது சார்ந்த துறைகள் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே மின்சார பைக்குகள் வாங்குவதால் அரசாங்கத்துக்கு எந்த பயனும் இல்லை என்பதால் மானியம் குறைக்கப்பட்டது.
FAME2திட்டத்தில் 2,3,4சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் 10லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதலில் இதற்காக 10ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கனரக தொழில்துறை மட்டும் 3ஆம் கட்ட திட்டத்துக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அதற்கும் போதுமான ஒத்திசைவு அரசு தரப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. டெஸ்லா மாதிரியான பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வர திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதுவும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் போலவே இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மானியம்குறையும்பட்சத்தில் தங்கள் நிறுவன இருச்ககர வாகனங்கள் அதிக விலைக்கு விற்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மின்சார பைக் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சார்ஜ் கட்டமைப்பை இந்தியா முழுவதும் செய்ய வசதியாக இருக்கும் என்றும் நிறுவனங்கள்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.