தடையை நீக்கிய ரிசர்வ் வங்கி…
போதிய ஆவணக்களை சமர்ப்பிக்காமல் விதிகளை மீறியதால் ரேசர் பே மற்றும் கேஷ் ஃபிரீ ஆகிய நிறுவனங்கள் மீது கடந்தாண்டு ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது. இந்நிலையில் புதிதாக வணிகர்களை திரும்ப சேர்ப்பது தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை, ரிசர்வ் வங்கி நீக்கி ஆணையிட்டுள்ளது. தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புதிய வணிகர்களை சேர்க்கும் பணிகளை இந்த இரண்டு நிறுவனங்களும் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. தடை நீக்கப்பட்டதை அடுத்து PAஎனப்படும் பேமண்ட் சான்று புதிதாக பெறப்பட்டதாக ரேசர் பே நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேடிஎம் மற்றும் பே யூ ஆகிய நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி தெளிவுரைக்காக காத்திருக்கின்றனர். ரேசர் பே மற்றும் கேஷ் ஃபிரீ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் 70 முதல் 80 விழுக்காடு வரை புதிய வணிகர்களை சேர்த்து வருகின்றன. தடை நீங்கியதால் அசுர வேகத்தில் இயங்க இந்த இரண்டு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.