வெங்காய விலை சரிவு…
இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விலை பாதியாக வீழ்ந்திருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மொத்த விற்பனையில் வெங்காயத்தின் விலை 50%குறைந்திருக்கிறது என்று டிசம்பர் 7 ஆம் தேதி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காரிப் காலத்து வெங்காய அறுவடையும் சில இடங்களில் தொடங்கியிருக்கிறது.
லசல்கோனில் உள்ள மொத்த வெங்காய விற்பனை மண்டியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 20 முதல் 21 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில வாரங்களுக்கு முன்பு 39-40 ரூபாயாக இருந்து வந்தது. டிசம்பர் 7 ஆம் தேதி வெங்காயத்தினை முற்றிலும் ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் விளைவாக இந்தியாவில் வெங்காய விலை உடனடியாக சரியத் தொடங்கியது. ஏற்றுமதி தடைக்கு எதிராக வெங்காய விவசாயிகள் போராட்டங்களையும் நடத்தினர். வெங்காய விற்பனை அதிகரித்து வரும் நிலையில், தடையை மத்திய அரசு நீக்கும் என்று நம்புவதாகவும் வெங்காய ஏற்றுமதியாளரான அஜித் சிங் எனபவர் தெரிவித்துள்ளார். உள்ளூர் சிவப்பு வெங்காயம் சந்தையில் அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ந்திருக்கிறதாம். லசல்கோனில் சிவப்பு வெங்காயத்தின் விலை டிசம்பர் 6 ஆம் தேதி கிலோ 45 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஏற்றுமதி தடை விதிக்கப்பட்ட பிறகு ஒரு கிலோ 21 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக சரிந்திருக்கிறது. சராசரி விலை 47%குறைந்திருக்கிறது. அரசாங்கம் எதிர்பார்த்ததைவிடவும் அதிகளவு சிவப்பு வெங்காயம் சந்தையில் கிடைத்து வருகிறது. டிசம்பர் 19ஆம் தேதி மட்டும் லசல்கோனில் 3.66லட்சம் டன் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதே நிலை கடந்தாண்டு 3.69லட்சம் டன் சிவப்பு வெங்காயம் சந்தைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட அதே வயல்களில் இந்த முறை சிவப்பு வெங்காயம் அதிகளவில் விளைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.