முரட்டு டீல் பேசும் ஃபிளிப்கார்ட்.,
முன்னணி ஆன்லைன் வணிக நிறுவணங்கள் கொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய சரிவுகளை சந்தித்து வருகின்றன.
விற்பனையில் மந்தம், மக்கள் மீண்டும் பழையபடி கடைகளுக்கே சென்று பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவது உள்ளிட்ட காரணிகளால் ஆன்லைன் பொருட்கள் விற்பனை பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம், தனது வியாபாரத்தை விரிவுபடுத்த 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை முதலீடாக பெற முயற்சிகளை செய்து வருகிறது. இதேபோல் வால்மார்ட் நிறுவனம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை முதலீடாக ஈர்க்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக ஃபிளிப்கார்ட் திகழும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வால்மார்ட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஃபோன் பே அண்மையில் அதில் இருந்து விலகியது. வால்மார்ட் மற்றும் மற்ற முதலீட்டாளர்களிடம் ஃபோன்பே நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இவை அனைத்தும் தகவல்களாக மட்டுமே தொடர்கின்றன. எனினும் அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. முதலீடுகள் குறித்து கசிந்திருக்கும் தகவல்கள் உண்மையா என்று விவரம் ஃபிளிப்கார்ட்டிடம் கேட்டிருந்த போது, அவர்கள் அதற்கு அதிகாரபூர்வமாக செய்தி நிறுவனங்களுக்கு ஃபிளிப்கார்ட் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.