முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் லாபம்…
இந்திய பங்குச்சந்தைகளில் டிசம்பர் 21 ஆம் தேதியான வியாழக்கிழமை குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்து 70,865 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 104 புள்ளிகள் உயர்ந்து 21,255 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு 4.18 லட்சம் கோடி ரூபாய் லாபம் பதிவானது. சந்தை மதிப்பு 354.38 லட்சம் கோடி மூலதனங்கள் இருந்தன. வர்த்தக நேர முடிவில் 2662 நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. 1111 பங்குகள் சரிந்தன. 123 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியில் நிஃப்டி மீடியா பங்குகள் பெரிய ஏற்றத்தை கண்டன. குறிப்பாக ஜீ மற்றும் சோனி இணைப்பு முக்கிய பங்கு வகித்தது. Bharat Petroleum,Britannia ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Apollo Hospitals, HDFC Bank,Hindalco Industriesஆகிய நிறுவனங்கள் 2 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகப்பெரிய சரிவை கண்டது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள் 2 விழுக்காடு வரை சரிந்தன. சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கம் விலை டிசம்பர் 21, ஆம் தேதி சற்று சரிந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் வீழ்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் முன் தின விலையைவிட 10 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5825 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 46,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது.
இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.