கட்டுக்குள் வரும் அமெரிக்க பணவீக்கம்…
அமெரிக்காவில் பணவீக்கம் என்பது கடந்த நவம்பரில் 3விழுக்காடுக்கும் கீழ் குறைந்திருப்பதாக அந்நாட்டு தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வரும் மார்ச் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அக்டோபரில் இருந்ததைவிட 0.1 விழுக்காடு அளவுக்கு பணவீக்கம் நவம்பரில் குறைந்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் பர்சனல் கன்சம்ப்சன் எக்ஸ்பென்டிச்சர் எனப்படும் PCE அதிகரித்து இருந்ததாகவும், மார்ச் 2021க்கு பிறகு PCE முதல் முறையாக 3 விழுக்காடுக்கு கீழ் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஆற்றல் துறை சார்ந்த பணவீக்கம் என்பது நவம்பரில் 3.2விழுக்காடாக இருக்கிறது. இதுவும் கடந்த 2021 ஏப்ருக்கு பிறகு மிகவும் குறைவாகும். இதுவே கடந்த அக்டோபரில் 3.4%ஆக இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது பணவீக்கத்தை 2 விழுக்காடாக குறைக்க தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வரும் மார்ச் மாதத்தில் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் அளவு என்பது 72 விழுக்காடாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 2022 மார்ச்சில் இருந்து இதுவரை 525 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் கடன்களின் வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைத்திருக்கிறது. நான்காவது காலாண்டில் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி என்பது 2.7% என்ற அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பொருளாதாரம் என்பது 3ஆவது காலாண்டில் 4.9% வளர்ச்சியை கண்டிருக்கிறது.