எல்ஐசிக்கு அவகாசம் அளித்த மத்திய அரசு…
அரசுத்துறை நிறுவனமான எல்ஐசியில் மினிமம் பப்ளிக் ஷேர் ஹோல்டிங் என்ற 25 விழுக்காடு MPS சலுகைக்கு 10 ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. கடந்த மே 2022க்கு பிறகு எல்ஐசி நிறுவனத்துக்கு இது போன்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. செபியின் விதிப்படி ஒரு நிறுவனம் 25% MPs என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகுதான் பெற முடியும். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு எடுக்கும் முடிவுகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மே மாதம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு பிறகு எல்ஐசி நிறுவன பங்குகள் 40விழுக்காடு வரை விலை சரிந்திருந்தது. இந்த சூழலில் எல்ஐசியின் பங்கு மதிப்புகள் தற்போது மீண்டும் மெல்ல உயர்ந்து வருகிறது. ஆனாலும் ஆரம்ப பங்கு வெளியீட்டின்போது 949 ரூபாய்க்கு இருந்த பங்குகள் தற்போது வெறும் 764.55ரூபாயாக மட்டுமே இருக்கிறது. சரிந்த எல்ஐசி பங்கு மதிப்புகளை மீட்க 6,7 பகுதிகளை உயர்த்த எல்ஐசி நிர்வாகக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. எல்ஐசியில் இன்னும் உற்பத்தித் திறனை அதிகரிக்க தகவல் தொழில்நுட்ப நிபுணர்களையும் எல்ஐசி களமிறக்கி இருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை எல்ஐசி நிறுவனம் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.