இந்தியாவில் கொட்டும் பண மழை!!!
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடுகளை இந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கொட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் இந்த காலகட்டத்தில் இந்தியாவிற்குள் வந்துள்ளது.
அதாவது கடந்தாண்டு 841 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஏப்ரல் முதல் அக்டோபருக்குள் முதலீடுகளாக செய்யப்பட்டன. இதுகுறித்து ரிசர்வ் வங்கியும் கடந்தாண்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மொத்த முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க வங்கிகளில் வெறும் 3விழுக்காடு வட்டி மட்டுமே கிடைத்து வந்த நிலையில் இந்தியாவில் 5 விழுக்காடு வட்டி கிடைத்ததும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்தும் கணிசமான டெபாசிட் இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறதாம். எந்தவித நிதி சிக்கலும் இல்லை என்பதும் இதன் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது. FCNR (B) வகை டெபாசிட்களுக்கு சில வரி சலுகைகளை ரிசர் வங்கி அளித்ததும் இந்த முதலீடுகள் உயர முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் இந்த வகை முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.அடுத்தாண்டு இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வலுவடையும் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.