பணம் இல்லாம எண்ணெய் வரல…!!
ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. சோகோல் ரக கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்திருக்கிறது. விசாரித்துப்பார்த்தால், மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டு வந்த பணம் முறையாக அனுப்புவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. Sakhalin-1 LLC என்ற நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அனுப்பப் படுகிறது. வழக்கமாக சீன யுவான் மூலமாக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் அரபு அமீரகத்தி திராம்ஸ்களில் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. Sakhalin-1 LLC நிறுவனத்திற்கு அளிக்கப்படும் பணம் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறதாம். வழக்கமான அளவாக நவம்பரில் இருந்து டிசம்பருக்குள் 6 பெரிய பெட்டிகளில் கச்சா எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனம் இறக்குமதி செய்யும். ஆனால் தற்போது அந்த பெரிய எண்ணெய் சரக்குக்கப்பல்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, சிஙகப்பூர் பக்கமாக திரும்பி நிற்கிறதாம். விரைவில் பேமண்ட் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் இருநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்நிலையில் அமெரிக்க டாலர்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. கூடுதல் செலவுகளை இந்தியன் ஆயில் நிறுவனமே ஏற்கும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது