டெஸ்லாவை தூக்கி சாப்பிட்ட சீன நிறுவனம்…
உலகின் மதிப்பு மிக்க மின்சார கார்கள் என்ற பெருமையை எலான் மஸ்கின் டெஸ்லா கார் கொண்டிருந்தது. இதனை தற்போது சீன நிறுவனமான, BYD தட்டிச்சென்றுள்ளது. இது உலகளவில் மின்சார கார் விற்பனையில் மிகப்பெரிய திருப்பு முனையாக மாறும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைவிட சீன நிறுவனமான BYD முதலிடம் வகிக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஜப்பானைவிட அதிக மின்சார கார் ஏற்றுமதிக்கு வாய்ப்பு சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மெயின்லேண்ட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 36 லட்சம் கார்களில் 13 லட்சம் கார்கள் மின்சார கார்களாக இருக்கிறது. டெஸ்லா, பிஒய்டி ஆகிய நிறுவனங்களை ஒப்பிடுகையில் அசுர வேக வளர்ச்சி என்பது BYD நிறுவனத்திடம்தான் இருக்கின்றது என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். விலை என்ற அம்சம் டெஸ்லா காரைவிட BYD கார்களுக்கு பெரிய சாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் விற்கும் தொகையைவிட, குறைவான விலையிலேயே சீனாவின் BYDநிறுவன கார்கள் விற்கப்படும் என்கிறார்கள் நிபுணர்கள். கார்களுக்கு ஒரு காலத்தில் பெரிய சந்தையாக இருந்த ஐரோப்பிவிலும்,அமெரிக்காவிலும் வரிகளும் அதிகம் அதே நேரம் போதுமான பணியாளர்களும் மின்சார கார்கள் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்கிறது புள்ளிவிவரம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் பிரபல தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் நிறுவனம் ஒரு கால கட்டத்தில் BYDயில் அதிக முதலீடுகள் செய்திருந்ததை பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர். 2000ஆம் ஆண்டுகளில் செல்போன்களுக்கு லித்தியம் அயன் பேட்டரிகளை BYD நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. பின்னர் ஹைப்ரிட் கார் ஒன்றில் உற்பத்தியை தொடங்கிய BYD நிறுவனம், பின்னாளில் அதிக உற்பத்தியை செய்கிறது. சீனாவில் மின்சார கார் உற்பத்தியில் சீனா கொடிகட்டி பறப்பதற்கு பிரதானமான காரணமாக சீன அரசு அளித்து வரும் மானியம் குறிப்படத்தக்க அம்சமாகும். அடுத்த தலைமுறை மின்சார கார்களை BYD நிறுவனம் அடுத்தாண்டு சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
எந்த ஒரு கார் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவேற்புக்கும் ஏற்றபடிதான் இயங்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. முதலிடத்தை பிடிக்கும் BYD நிறுவனம்,தன்னையே தற்காத்து,தகவமைப்பது நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எப்போதும் தனக்கு தானே போட்டியாளராக மாறும் சூழல் ஏற்படும் என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.