முடக்கவும் , செயல்படுத்தவும் புதிய நடைமுறையை அமல்படுத்தும் EPFO…
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அவர்கள் சார்ந்த தரவுகளை கொண்டிருக்கும் நிறுவனமாக EPFO திகழ்கிறது. இந்த நிறுவனம், சம்பளம் பெறும் மக்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளையும் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட கணக்குகளை முடக்கவும், முடக்கிய கணக்குகளை சரிபார்க்க 30 நாட்கள் அவகாசமும் அளிக்கும் வகையில் புதிய மாற்றங்களை செய்திருக்கிறது. வங்கிக்கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 14 நாட்கள் கூடுதலாக கணக்கு முடக்கத்தை நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் PFO நிறுவனம் வகுத்துள்ளது. தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. முறைகேடாக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் புதிய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின் பிரதான நோக்கமே, முதலீடுகளை கணக்குகளில் பாதுகாப்பது மட்டுமே. சமூக பாதுகாப்பு சாரந்த பலன்களை 6 கோடி பேருக்கு வழங்கும் வகையில் PFOநிறுவனம் இயங்கி வருகிறது. MID,UAN ஆகிய எண்களை வைத்து முறைகேடாக பணம் திருடப்படுவதை தடுக்க பல்வேறு நடைமுறைகளையும் அந்நிறுவனம் அமல்படுத்தியிருக்கிறது. புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்பது, தகுதியான, சரியான நபர்களால், வங்கிக்கணக்குகளில் நிர்வாகம் செய்யப்படவேண்டும் என்பதை உறுதி செய்யும். எவரேனும் விதிகளை மீறி வேறொருவரின் பணத்தை திருட முயன்றால், அந்த நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி வேறொரு நபரின் பணத்தை திருடியிருந்தால் அபராதம் மற்றும் அதற்கு உண்டான வட்டியுடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.