யாருக்கு செல்லும் அந்த உரிமை…?
இந்தியா போன்ற கிரிக்கெட் விரும்பும் நாடுகளில் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் பார்க்கவே பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டிஸ்னி ஸ்டார் மற்றும் ஜீ நிறுவனங்களுக்கு இடையே ஐசிசி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை பெற பெரிய போட்டி நிலவுகிறதாம். 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலேயே இதற்கான டிவி ஒப்பந்தம் தயார் செய்யப்பட்ட நிலையில் போதிய தொகையை ஜீ நிறுவனம் டெபாசிட் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்கு ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியது . 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை யார் ஒளிபர்பப இருக்கிறார்கள் என்ற கேள்வி பிரதானமாக எழுந்துள்ளது. இந்த போட்டிகள் தென்னாப்ரிக்காவில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெற இருக்கிறது.
ஐசிசிடிவி ஒப்ப்நதத்தை டிஸ்னி ஸ்டார் வாங்கியிருக்கிறது டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை 2024-2027 வரை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விடப்பட இருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரக்கு நிகராக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் வயாகாம் 18 நிறுவனங்களும் போட்டியில் உள்ளன. ஐசிசியின் சப் லைசன்சிங் எனப்படும் உள் ஒப்பந்தத்தில் குழப்பம் நிலவி வருகிறது. பிரச்னை இருக்கும்பட்சத்தில் ஜீ நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. சோனியும் ஜீயும் இணையாதபட்சத்தில் 1.5 பில்லியன் ஐசிசிடிவி டீல் கேள்விக்குறையாகும் என்று கூறப்படுகிறது. 2024 நிதியாண்டில் ஜீ நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 67% சுருங்கியிருக்கிறது. அதாவது 141 கோடிரூபாய் மட்டுமே சிக்கலில் இருக்கிறது. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் நேயர்கள் குறைந்துள்ளதால், விளம்பரம் தரும் நிறுவனங்களும் தயங்கி வருகின்றன. டிஸ்னி ஸ்டார் நிறுவனத்தின் செயல்பாட்டு கட்டணம் என்பது 82%குறைந்திருக்கிறது. 432 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த இழப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில் டிவியில் கிரிக்கெட் ஒளிபரப்புவது என்பது பெரிய சிக்கலான விஷயமாக மாறிவருவதாக அந்த துறையில் நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.