5 முக்கிய முடிவுகள்..!!!
2023-ஆம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்திதின் தலைவர் முகேஷ் அம்பானி, பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார்.
ஒளிபரப்புத்துறை மட்டுமின்றி, 5ஜி சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு மற்றும் எண்ணெய் முதல் ரசாயன பொருட்கள் வரை அம்பானி மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். இது மட்டுமின்றி அண்மையில் நிதித்துறையிலும் ஜியோ நிறுவனம் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் சேவைகள் மற்றும் நிதித்துறை கடன் வழங்கும் துறைகளில் தங்களின் இருப்பை ரிலையன்ஸ் குழுமம் பதிவு செய்திருக்கிறது. சொத்து நிர்வாகம், காப்பீடு மற்றும் பேமன்ட் ஆகிய துறைகளிலும் டிஜிட்டல் தரகு நிறுவனத்திலும் அம்பானி கவனம் செலுத்தி வருகிறார். ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் நேரடியாக இல்லாமல், பிளாக் ராக் என்ற நிறுவனத்துடன் 50-50 ஒப்பந்தத்தில் தனது பணிகளை செய்ய இருக்கிறது. கடந்த ஆக்ஸ்ட் மாதம் நடந்த ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தனது அடுத்தகட்ட முடிவுகள் குறித்தும் திட்டங்களை அறிவித்தார். தனது 3 பிள்ளைகளையும் தங்கள் நிறுவன்த்தில் செயல்பாடு இல்லாத இயக்குநர்களாக முகேஷ் அம்பானி அறிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டலாக மாற்றும் திட்டங்ளும் வகுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பசுமை ஆற்றல் துறையிலும் அந்நிறுவனம்கவனம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் புதிய வரவாக வால்ட் டிஸ்னியின் இந்திய வணிகத்தை சேர்க்கப்படுகிறது. இது இந்திய ஊடக வரலாற்றில் பெரிய இணைப்பு முடிவாகும். இது மட்டுமின்றி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் கடந்தாண்டே 75பில்லியன் அமெரிக்க டாலர்களை டிஜிட்டல் துறையில் முதலீடு செய்ய அம்பானி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது மட்டுமின்றி டிதிட்டல் வகையில் ரீட்டெயில் வணிகத்தையும் ரிலையன்ஸ் முன்னெடுத்தது. 2023 ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையில் ரிலையன்ஸ் பெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜியோ பாரத் என்ற செல்போனை 999 ரூபாய்க்கு முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தியிருந்தார். 5ஜி சேவைக்காக 1.6பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சாதனங்களை நோக்கியாவிடம் இருந்து வாங்க ரிலையன்ஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் மாத கணக்குப்படி, ஜியோ நிறுவனத்துக்கு புதிதாக 3 கோடியே 47 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு இணைந்துள்ளனர்.