வரும் வாரத்தில் பங்குச்சந்தையில் கவனிக்க வேண்டியவை..
கடந்த 28 ஆம் தேதி பங்குச்சந்தை முடியும்போதே வழக்கத்தை விட 1 விழுக்காடு அதிகமாக முடிந்தது. இந்திய பங்குச்சந்தைகளில் விரைவில் மிகப்பெரிய உச்சம் வருவதற்கான வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
2025 நிதியாண்டின் முதல் வாரம் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது,. இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை தரவுகள், உற்பத்தி மற்றும் சேவைத்துறை குறியீடுகள் வெளியீடு, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு தொடர்பான முடிவுகள் மற்றும் 2024 நிதியாண்டின் மார்ச் வரையிலான காலகட்டத்தின் முடிவுகளும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. லார்ஜ் கேப் எனப்படும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் இந்தியாவில் ஏப்ரலில் தேர்தல் நடைபெற இருப்பதும் முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்துக்கு உயர்ந்தே இருக்கும் என்றும் மாதாந்திர வாகன விற்பனை விவரங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் 4 ஆவது காலாண்டு வளர்ச்சி அளவு இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 10 அம்சங்களை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்..
- ஆட்டோமொபைல் சேல்ஸ் துறையில் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தின் தரவுகளை மாருதி சுசுக்கி இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தரவுகளை வெளியிட இருக்கின்றன. இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2)வட்டி விகிதங்களை குறைக்கலாமா என்பது பற்றி ரிசர்வ் வங்கி எடுக்க உள்ள முடிவுகளால் கவனம் ஏற்பட்டுள்ளது.
3)உள்ளூர் பொருளாதார தரவுகள்..
இந்தியாவின் உள்ளூர் தரவுகளும் பங்குச்சந்தையின் போக்கை மாற்றக்கூடியவை
4)அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரி ஜெரோம் பாவெலின் பேச்சு வரும் 3 ஆம் தேதி இடம்பிடிக்க இருக்கிறது. இந்த பேச்சில் வட்டி விகிதம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படலாம் என்பதும் சந்தையி ஈர்த்து வருகிறது.
5)உலகளாவிய பொருளாதார தரவுகள்,
6)கச்சா எண்ணெய் விலை
7)தொழில்நுட்ப வல்லுநர்களின் குழு
8)F&O துறையில் முதலீடுகள் அதிகம் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
9)கார்பரேட் செயல்பாடுகள்
10) சில முக்கிய துறை பங்குகளின் ஆரம்ப பங்கு வெளியீட்டு திட்டங்களும் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக பாரதி ஹெக்சகாம் நிறுவனத்தின் ஐபிஓ வரும் 3 ஆம்தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்கின் விலை 542 ரூபாயாக விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
4275 கோடி ரூபாய் நிதி திரட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.