போலி HRA சலுகை பெற்றது கண்டுபிடிப்பு..
நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்குப்படும் வீட்டு வாடகை படி பணத்தை போலி பான் எண்களை பயன்படுத்தி சிலர் முறைகேடு செய்ததை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை இப்படி போலியான தரவுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் நிரந்தர கணக்கு எண்ணில் 1 கோடி ரூபாய் வருமானம் வாடகையாக வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் இப்படி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை வைத்திருப்பவருக்கு தெரியாமலேயே இந்த வகையில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துளளது. தற்போதுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரியை செலுத்தாமல் ஏமாற்ற முயன்றவர்களை எளிதாக கண்டுபிடித்து விட முடிவதாக வருமான வரித்துறை தெரிவிக்கிறது. வருமான வரி செலுத்தும் பழைய முறையை தேர்வு செய்துள்ளோருக்கு மட்டுமே அரசாங்கம் இப்படி ஒரு சலுகையை தந்துள்ளது. சுய தொழில் செய்வோருக்கு இந்த சலுகை கிடைக்காது. இந்த ஹெச் ஆர் ஏ செலுத்த வேண்டுமானால் அதற்கு தகுதியாக அடிப்படை ஆதாரங்கள் அளிப்பது முக்கியம். ரென்டல் அக்ரிமன்ட் எனப்படும் ஒப்பந்தமும் மிகவும் முக்கியமாகும். சொந்த வீட்டில் வசிப்போருக்கு இந்த சலுகைகள் கிடைக்காது.