நிதியாண்டின் முதல் நாளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்..
இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு அழகாய் பிறந்துள்ளது. புத்தாண்டில் சில பகீர் மாற்றங்களும், சில சாதகமான மாற்றங்களும் அமலுக்கு வந்துள்ளன. *இந்தியாவில் ஒரு வாகனம் ஒரே பாஸ்ட் டேக் என்ற முறை 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துவிட்டது. *பாரத ஸ்டேட் வங்கியில் கிரிடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி SBI கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி வீட்டு வாடகை தர இயலாது. *ola நிறுவனம் தனது சிறிய பிபிஐ வாலட் சேவையை 1 ஆம் தேதியில் இருந்து மாற்றியுள்ளது. இது தொடர்பாக கடந்த 22 ஆம் தேதியே வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. *தேசிய ஓய்வூதிய திட்டத்தில் புதிய இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஆதார் எண்ணை பென்சன் கணக்குடன் இணைத்துக்கொள்ள இயலும். *SBI வங்கியில் டெபிட் அட்டைகளுக்கான பராமரிப்புக் கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. *அனைத்து வகை காப்பீடுகளும் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் மயமாக்குவதை ஐஆர்டிஏஐ அமைப்பு கட்டாயமாக்கியுள்ளது. *ஒரு காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி 35 ஆயிரம் ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்தால் அவர்கள் ஏர்போர்ட்களில் லாஞ்ச் வசதிகளை பெற முடியும். *ஆக்சிஸ் மற்றும் எஸ் வங்கிகளிலும் இந்த புதிய சலுகை ஏப்ரலில் அமலுக்கு வருகிறது.