கிராமங்களை குறிவைக்கும் நிறுவனங்கள்..
வீடுகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விற்பனையில் நகரங்களை கிராமங்கள் மிஞ்சியுள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக நடக்கும் அதிசய நிகழ்வாகும். டிசம்பர் மற்றும் ஜனவரியில் கிராமபுறங்களில் இந்த வகை பொருட்களை வாங்கும் விகிதம் 6.5 விழுக்காடாக இருந்துள்ளது. ஆனால் பிப்ரவரியில் இது அப்படியே இரு மடங்காக உயர்ந்து 11.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே நேரம் நகரங்களில் டிசம்பரில் 6.1 விழுக்காடும், ஜனவரியில் 4.7 விழுக்காடும், பிப்ரவரியில் 8.7 விழுக்காடும் பொருட்களை வாங்கியிருப்பதாக நீல்சன் ஐகியூ தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக சரிந்திருந்த கிராமபுற பொருட்கள் தேவை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நகரங்களில் இருந்ததைவிட கடந்தாண்டு நவம்பரில் அதிகம் பொருட்கள் கிராமங்களில் விற்கப்பட்டன. கிராமங்களில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்குவது உண்மைதான் என்று டாபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் முதலே கிராமபுற மக்கள் அதிகம் பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 1 முதல் 1.12 லட்சம் கிராமங்களை சென்றடையும் வகையில் டாபர் தனது கிளையை விரிவுபடுத்தி வருகிறது. அறுவடை காலம் என்பதால் மக்கள் அதிகம் பொருட்களை வாங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சில உணவுப்பொருட்கள் விலை கணிசமாக குறை்நததும் இந்த உயர்வுக்கு காரணம் என்று பார்லே நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் பணவீக்கம் குறைந்ததும், மலிவு விலை பொருட்களை மக்கள் அதிகம் வாங்குவதும் உயர்ந்துள்ளதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். fmcg எனப்படும் சந்தையில் வேகமாக விற்கப்படும் பொரூட்களின் சந்தையில் கிராமப்புறங்களின் பங்களிப்பு 40 விழுக்காடாக உள்ளது. கடந்த டிசம்பர் வரையில் வழக்கத்தை விட 3-5 விழுபக்காடு குறைவாக கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு விலைவாசி உயர்வும், மோசமான பருவமழையும் காரணங்களாக பார்க்கப்படுகிறது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி 4-6 விழுக்காடாக இருந்ததில் இருந்து தற்போது 1 விழுக்காடாக குறைந்திருப்பதாக நீல்சன் ஐகியூ நிறுவனம் தெரிவிக்கிறது.