இந்திய ஈக்விட்டி பங்குச்சந்தையை பாராட்டிய பிரபலம்..
உலகின் முக்கியமான சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்களில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் பிரதானமானது. இந்த நிறுவனத்தின் தலைவர் ஜொனாத்தன் கிரே இந்திய பங்குச்சந்தைகளை வெகுவாக பாராட்டியுள்ளார். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.4 விழுக்காடும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.3 விழுக்காடும் கடந்த ஆறுமாதங்களில் உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி அவர் பாராட்டியிருக்கிறார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை ஈக்விட்டி சந்தை உயர்ந்திருப்பது உதவிகரமாகவும், உலக முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஈக்விட்ட சந்தையில் முதலீடு செய்வோரின் பிரதான தேர்வாக இந்தியா இருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார். . பிளாக்ஸ்டோன் நிறுவனம் கடந்தாண்டு டிரில்லியன் டாலர் அளவுள்ள சொத்துகளை நிர்வகித்து வருவதும், 50 பில்லியன் டாலர் அளவுக்கு தனியார் ஈக்விட்டி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறது. வளர்ச்சி சார்ந்த அரசாங்கம் இருப்பதாக புகழ்ந்துள்ள ஜொனாத்தன்,ஜிஎஸ்டி, திவால் நிறுவனங்களுக்கான கோட் மற்றும் பங்குச்சந்தை முன்னெடுப்பான REIT ஆகியவற்றை பாராட்டியுள்ளார். பொருட்கள் கிடங்குகள் மற்றும் தரவு மையங்களில் இந்த நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஜொனாத்தன் கூறியுள்ளார். சுகாதாரம்,நிதிசேவை மற்றும் பயணம் சார்ந்த துறைகளிலும் முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை இந்தியாவில் நிர்வகிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.