காக்னிசன்ட்ல இன்கிரிமண்ட் ஒத்திவைப்பு..
இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசன்ட் நிறுவனம் திகழ்கிறது.இந்நிறுவனத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வரும் இன்கிரிமண்ட்டுக்கு பதிலாக 4 மாதங்களுக்கு பிறகு தான் இன்கிரிமண்ட் வரும் வகையில் பணிகள் நடக்கின்றன,. அதாவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தான் புதிய இன்கிரிமண்ட்டுக்கான பணிகள் தொடங்க இருக்கின்றன. கடந்தாண்டு ஏப்ரலில் இந்த நிறுவனத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. 3ஆண்டுகளில் நான்கு இன்கிரிமன்ட் பெற்றுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களின் கடின உழைப்பை மதிப்பதாக கூறியுள்ள அந்நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி மறுத்தது. உலகளவில் அந்நிறுவனத்தில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 70 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 2.54 லட்சம் பேர் இந்தியர்கள். உலகளவில் பொருளாதார காரணிகள் மந்த நிலையில் இருப்பதால் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அந்நிறுவனம் திணறி வருகிறது. கடந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 1.7 % வீழ்ச்சியை சந்தித்தது. வருவாய் வீழ்ந்தாலும் லாபம் 7 விழுக்காடு உயர்ந்து 558 மில்லியன் டாலர்களாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் 2.7 விழுக்காடு வரை குறையும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.