நடப்பு நிதியாண்டின் முதல் நிதி கொள்கை கூட்டம்..
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களின் விகிதத்துக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். கடன்கள் மீதான வட்டி விகிதம் தற்போது உடனடியாக குறைய வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.விலைவாசி உயர்வு பற்றி பேசிய அவர், இது பெரிய சவலாக இருப்பதாக கூறினார். 4 விழுக்காடு அளவுக்கு பணவீக்கத்தை குறைப்பதே இலக்கு என்றும் அவர் கூறினார். இந்தியாவில் விலைவாசி உயர்வு 2முதல் 6 விழுக்காடுக்குள் இருக்கலாம் என்று கூறியுள்ள சக்தி காந்ததாஸ், வரும் 2026 நிதியாண்டில் பணவீக்கம் என்பது 4.1 விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உணவு தானிய விலைகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணமாக கூறியுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் விலைவாசி உயர முக்கிய காரணிகளாக உள்ளது.இந்திய பொருளாதாரம் சிறந்த முறையில் வளர்ந்து வருவதாகவும் தாஸ் குறிப்பிட்டார். இந்தியாவில் கிராமபுற வளர்ச்சியும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
2024-ல் ரெபோ வட்டி விகிதம் குறைய வாய்ப்பே இல்லை என்றும் சில துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வின் நிலைப்பாடும் இதே பாணியில் இருப்பதால் வரும் நாட்களிலும் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படும் என்றும் கூறப்படுகிறது.